ஐ.நா சபையில் பேசுவதற்காக பிரதமர் நியூயார்க சென்றடைந்தார்

ஐ.நா சபையில் பேசுவதற்காக பிரதமர் நியூயார்க சென்றடைந்தார்

NajibUN

பிரதம மந்திரி டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஐ.நா. சபை பொதுக்குழுவில் பேசுவதற்காக மலேசிய நேரப்படி இன்று 21/09/2014 காலை நியூயார்க் சென்றடைந்தார்.

தனது மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மன்சூருடன் இன்று காலை (அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை) நியூயார்க் வந்தடைந்த பிரதமரை வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அனீபா அமன், அமெரிக்காவிற்கான மலேசிய தூதர் டத்தோ அவாங் அடேக் ஹுசின் மற்றும் ஐ,நா விற்கான மலேசியாவின் நிரந்திர பிரதிநிதி டத்தோ ஹுசைன் அனீப் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பிரதமர் நஜீப் செப்டம்பர் 26 அன்று ஐ.நா சபையின் பொதுக்குழுவில் உரை நிகழ்த்துகிறார்.

இதை தவிர்த்து ஐ.நா சபை மட்டுமின்றி வேறு பல அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கிறார். அமெரிக்க தொழிலதிபர்கள் பங்குபெறும் நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.

செப்டம்பர் 22 தேதி அமெரிக்கன் அகாடமி ஆப் சயின்ஸ் நடத்தும் க்ளொபல் ஸ்டெம் அலயன்ஸ்(Global Stem Alliance) துவக்க விழாவில் பிரமர் சிறப்பு பேச்சாளராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மலேசியாவில் குழந்தைகளுக்கான ஆரம்ப கல்வி வளர்ச்சியில் ஆற்றிய சேவையை பாராட்டி ஸ்டெம் ஹீரோ அவார்ட்( STEM Hero Award ) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பகிறார்.