என் தமிழ்

லோட்டஸ் குலிம் சதுரங்கப் போட்டியில் SJKT LDG Wellesley Lunas தேசிய வகை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை

கெடா, 05 செப்டம்பர் 2026 : 2026 சுதந்திர தினத்தை முன்னிட்டு 31 ஆகஸ்ட் 2026 அன்று லோட்டஸ் குலிம் பகுதியில் நடைபெற்ற “Pertandingan Catur Terbuka Lotus’s Kulim Siri Merdeka 2026” திறந்த சதுரங்கப் போட்டியில் SJKT LDG Wellesley Lunas பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.

இப்போட்டியில் பள்ளியைச் சேர்ந்த தருண் ராவ் குணாலன் ஒட்டுமொத்தப் பிரிவில் 7ஆம் இடத்தைப் பெற்றார். பெண்கள் B12 பிரிவில் காவியாஸ்ரீ வரதராஜன் 2ஆம் இடத்தையும், வித்யா பாரதி 3ஆம் இடத்தையும் பிடித்தனர். ஆண்கள் B10 பிரிவில் சித்தார்த்தன் கேசவன் 3ஆம் இடத்தைப் பெற்றார்.

பெண்கள் B8 பிரிவில் காவிக்குழலி 3ஆம் இடத்தையும், ஆண்கள் B8 பிரிவில் கபாபிலேஷ் நித்யானந்தன் 2ஆம் இடத்தையும் பெற்றனர். மேலும், 16 வயதுக்குட்பட்ட பிரிவில் மொல்லிவர்மன் பெருமாள் 2ஆம் இடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். மாணவர்களின் சிறப்பான சாதனைகளுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top