வெனிசுலா, 01 செப்டம்பர் 2026 : அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகள் அமலில் இருக்கும் என வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்படும் என்றும், அரசுக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டெல்சி ரோட்ரிகஸ் கூறினார். இது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என அவர் தெரிவித்தார்.







