பினாங்கு, 30 ஆகஸ்ட் 2026 : மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு கிளையின் ஏற்பாட்டில் SK Batu Lanchang பள்ளியில் மாணவர்களின் நற்பண்புகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மறையான மதிப்புகளை வளர்க்கும் நோக்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களிடையே நல்ல குணநலன்களையும் ஒழுக்கத்தையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு கிளையின் சமயக் கல்விப் பிரிவு தலைவர் தர்ம மாமணி எஸ்.வி. மணிமாறன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.







