என் தமிழ்

கெடா தமிழ்ப்பள்ளி U12 கால்பந்து போட்டி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

கெடா, 29 ஆகஸ்ட் 2026 : கெடா மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை ஒன்றிணைக்கும் கடாரம் மூடா எஃப்.சி. U12 கால்பந்து சாம்பியன்ஷிப் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர்களுக்கான U12 பிரிவில் தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் கிண்ணமும், சிறுமிகளுக்கான U12 பிரிவில் டத்தோ பி. சஹாதேவன் கிண்ணமும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இளம் வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கால்பந்து திறமையை வளர்ப்பதுடன், குழு உணர்வு, ஒற்றுமை மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் சிறந்த தளமாக இப்போட்டி அமைந்தது. இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாகுவதற்கும் இந்நிகழ்வு ஊக்கமளித்தது.

Scroll to Top