கனடா, 23 ஆகஸ்ட் 2026 : அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமல்படுத்தியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதே அளவில் வரி விதிக்க கனடா பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த புதிய நிபந்தனைகள் நியாயமற்றவை எனக் கூறிய கனடா, பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவது சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவின் புதிய பதிலடி வரிகள் செப்டம்பர் 8 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







