பெங்காலன் கூபோர் மாநில இடை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் 21/09/2014 ஞாயிறு அன்று 109 போலீசார்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தும்பக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ள டெலிமா ஹாலில் நடைபெறும் .
இதை பற்றி இன்று 19/09/2014 செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ அப்துல் கானி சல்லெஹ் வாக்கு சாவடி ஞாயிறன்று காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணிவரை திறந்திருக்கும் என தெரிவித்தார். தேர்தலை போட்டியாளர்களின் பிரதிநிதிகள் மேற்பார்வையிடுவார்கள் என அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் கல்வியாளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் காவல் துறை அனுமதியுடன் வாக்குப் பதிவின்போது தேர்தல் மேற்பார்வையாளர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 25 அன்று வரை தேர்தல் பெட்டிகள் காவல் நிலைய லாக் அப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மற்ற வாக்குகளுடன் எண்ணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தல் தேசிய முன்னனியின் மட் ரஜி மட் ஐல், பாஸ் கட்சியின் வான் ரோஸ்டி வான் இப்ராஹிம் மற்றும் சுயேட்சை வேட்பாளரான இசாட் புக்காரி இஸ்மாயில் புக்காரி என மும்முனைப் போட்டியாக நடைபெறுகிறது.