நாம் பேரியக்கமும் ம.இ.கா இணைந்து 1000 மலேசிய இந்திய இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்முறை பயிற்சிகள் வழங்குவதற்காக துவக்க விழா நிகழ்ச்சி 18/09/2014 அன்று கோலாலம்பூரில் உள்ள உள்ள மாணிக்கவாசகர் கட்டிடத்தில் உள்ள ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி 10 மாத காலம் வழங்கப்படும். Security and CCTV Camera Installation, Social Media Entrepreneurship, Mobile Phone Servicing, Computer Repairing and Networking, Desk Top Publishing, Plumbing and Wiring ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் மற்றும் நாம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் டத்தோ M.சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்தார். ரிவர் பேங்க் அகாடமியுடன் இணைந்து இந்த தொழில்முறை பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. நிகழ்வில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் கலந்துகொண்டார்.
Previous Post: தவறான செய்தி – இணையதளத்தின் மீது மலேசிய ஏர்லைன்ஸ் நடவடிக்கை
Next Post: நைஜீரியாவில் 23 கல்லூரி மாணவர்கள் பலி.