என் தமிழ்

நெகிரி செம்பிலான் தேர்தல் : வெற்றியை இலக்காகக் கொண்டு பக்காத்தான் ஹராப்பான் தீவிர பிரசாரம்

செரம்பான், 20 ஜூலை 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றியை இலக்காகக் கொண்டு பக்காத்தான் ஹராப்பான் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற தேர்தல் விருந்து நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்று கூடி, தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் வியூகங்கள், ஊக்கம் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்குமாறு விடுக்கும் ஒவ்வொரு அழைப்பும் வெறும் அரசியல் முழக்கமல்ல என்றும், மக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கும் உறுதியின் வெளிப்பாடாகும் என்றும் கூறினார்.

நெகிரி செம்பிலான் மக்களிடம் அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், பக்காத்தான் ஹராப்பானுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, மாநிலத்தின் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய தற்போதைய ஆட்சிக்கான மக்கள் ஆணையை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Scroll to Top