என் தமிழ்

நெகிரி செம்பிலான் தேர்தல் : வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் யுனேஸ்வரன்

நெகிரி செம்பிலான், 19 ஜூலை 2026 : நெகிரி செம்பிலானில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) வேட்பாளர்களுக்கு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்பாடல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி பட்சில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செனட்டர் ஐசையா டி. ஜேக்கப், தியோ நீ சிங், டாக்டர் முஜாஹித் யூசுப் ராவா உள்ளிட்ட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

செர்டிங் (N05) தொகுதியில் யாகோப் மக்மூத், பாலோங் (N06) தொகுதியில் முகமது ஸாஹின் சைனல் ஆபிடின், ஜெராம் படாங் (N07) தொகுதியில் ஜி. மணிவண்ணன் மற்றும் பஹாவ் (N08) தொகுதியில் தியோ கோக் சியோங் ஆகியோர் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடுகின்றனர்.

இந்த நான்கு வேட்பாளர்களும் மக்களின் நலனை முன்னிறுத்தி, உள்ளூர் வளர்ச்சியை வலுப்படுத்தவும், மக்களின் குரலுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கவும் உறுதியுடன் களமிறங்கியுள்ளதாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார். சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, ஒவ்வொரு தொகுதியின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ள பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top