என் தமிழ்

DIGITAL CONTENT GRANT (DCG) 2026 விண்ணப்பங்கள் தொடக்கம் – மலேசிய அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் கேம் நிறுவனங்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், 16 ஜூலை 2026 : கோலாலம்பூர்: டிஜிட்டல் உள்ளடக்க மானியம் (Digital Content Grant – DCG) 2026 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் விளையாட்டு (Digital Games) நிறுவனங்கள் இந்த மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மானியத் திட்டத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. ‘மெகா மானியம்’ (Mega Grant) மூலம் அதிகபட்சமாக RM2 மில்லியன் வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்த மானியம், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் விளையாட்டு அறிவுசார் சொத்துகளின் (IP) உருவாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை முழுமையான திட்டங்களை ஆதரிப்பதோடு, சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய உயர்மதிப்புடைய திட்டங்களை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

மேலும், சந்தைப்படுத்தல் மற்றும் வணிகமயமாக்கல் மானியம்’ (Marketing & Commercialisation Grant) மூலம் அதிகபட்சமாக RM300,000 வரை நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் விளம்பரம், சந்தைப்படுத்தல், விநியோகம் மற்றும் வணிகமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டு, மலேசிய அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் விளையாட்டு திட்டங்களின் சந்தை விரிவாக்கம் ஊக்குவிக்கப்படும்.

மானிய விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பாக விரிவாக விளக்குவதற்காக, மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC) மூன்று விளக்கக் கூட்டங்களை நடத்தவுள்ளது. அவை ஜூலை 22, ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 26, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மானியத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், விளக்கக் கூட்டத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளுமாறும், பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (KLSICCI) கௌரவ பொதுச் செயலாளர் டோனி கிளிஃபோர்டு தாமஸ் வெளியிட்டுள்ளார்.

விளக்கக் கூட்டத்தில் (Briefing session) பங்கேற்க : https://forms.cloud.microsoft/r/Lz05wny3UX

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க : https://www.mdec.my/grants/dcg

Scroll to Top