15 ஜூலை 2026 : SJKT சரஸ்வதி பள்ளி மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் சிறப்பாக விளங்கி, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 42ஆவது சைபுல் அரீனா சதுரங்கப் போட்டியில், திஷாலன் நான்காவது இடத்தையும், நந்தனேஸ்வரன் ஆறாவது இடத்தையும், சுகதீபன் பத்தாவது இடத்தையும் பெற்றனர்.
அதேவேளை, மைண்டா ஃபெஸ்ட் சதுரங்கப் போட்டியில், 10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஹர்ஷன் ஐந்தாவது இடத்தைப் பெற்று சிறந்த வீரர் விருதைப் பெற்றார். 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் திவ்யாஷினி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், ஒட்டுமொத்த தரவரிசையில் டார்வின் ஆறாவது இடத்தையும், தருண் ஒன்பதாவது இடத்தையும் பெற்றனர்.
மாணவர்களின் இந்தச் சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவ்வெற்றிகள் மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், கல்வி மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.






