சென்னை, 09 ஜூலை 2026 : நடிகர் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ரன்‘ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் மறுவெளியீட்டுக்கான முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
அதிரடி, காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த இந்தத் திரைப்படம், வெளியான காலத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், மாதவனின் வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. தற்போது வெளியாகியுள்ள முன்னோட்டக் காட்சி, படத்தின் முக்கிய காட்சிகளை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘ரன்’ திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.






