இந்தியா, 07 ஜூலை 2026 : தபா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எம். சரவணன், 2026 பசுமை வளர்ச்சி பொருளாதார உச்சி மாநாட்டில் (Green Growth Economic Summit 2026) சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் தொடர்பு ஏற்படுத்தும் (Pre-Summit Networking) நிகழ்ச்சியில், தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளை டத்தோ சரவணன் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில், பசுமை வளர்ச்சி, நிலைத்த பொருளாதாரம், புதுமை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்த மாநாடு, பல்வேறு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய தளமாக அமையும் என்ற நம்பிக்கையையும் டத்தோ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.






