ஜொகூர் பாரு, 11 ஜூன் 2026 : ஜொகூர் பாரு–சிங்கப்பூரை இணைக்கும் RTS Link திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக, பயணிகள் தடையற்ற மற்றும் உயர்தர டிஜிட்டல் இணைப்பைப் பெறுவதை உறுதி செய்ய மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) உறுதிபூண்டுள்ளது.
RTS Link சேவை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், பயணிகள் பயணத்தின் போது இணைய வசதி, மொபைல் தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளை எந்த இடையூறும் இன்றி பயன்படுத்தும் வகையில் தேவையான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மலேசியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் இந்த இருநாட்டு ரயில் சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விரைவான பயண வசதியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, டிஜிட்டல் இணைப்பு, தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் மற்றும் நெட்வொர்க் நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக தொடர்புடைய நிறுவனங்களுடன் MCMC தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






