தற்போது தெலுங்குத் தயாரிப்பாளரான என்.வி.பிரசாத் ஐ’ படத்தின் தெலுங்கு உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அந்த விலை கொடுத்து வாங்கியிருந்தால் அதுதான் தெலுங்கில் விற்கப்பட்ட ஒரு தமிழ்ப் படத்தின் அதிக பட்ச டப்பிங் விலையாக இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தின் டப்பிங் உரிமை சுமார் 27 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. மீண்டும் ஷங்கர் இயக்கத்திலேயே உருவாகியுள்ள படமான ‘ஐ’ படம் அந்த சாதனையை முறியடித்து 30 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.