என் தமிழ்

உலக இளம் கண்டுபிடிப்பாளர் கண்காட்சியில் சாதனை படைத்த S.J.K.T. காஜாங் மாணவர்கள்

சிலாங்கூர், 26 மே 2026 : உலக இளம் கண்டுபிடிப்பாளர் கண்காட்சி 2026 (World Young Inventors Exhibition 2026) போட்டியில் “Buzzoff Coffee Candle” என்ற புதுமையான கண்டுபிடிப்பின் மூலம் எஸ்.ஜே.கே.டி காஜாங் மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்று பள்ளிக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த சாதனையைப் பதிவு செய்த மாணவர்கள், தங்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் மற்றும் அறிவியல் சிந்தனையின் மூலம் சர்வதேச அளவிலான போட்டியில் சிறப்பாக திகழ்ந்துள்ளனர். “இளம் விஞ்ஞானிகள்” அமைப்பின் கீழ் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர்.

“Buzzoff Coffee Candle” எனும் இந்த கண்டுபிடிப்பு, புதுமையான சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதோடு, சுற்றுச்சூழல் மற்றும் அன்றாட பயன்பாட்டை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியைப் பெற்ற அணியில் குஹனேஷ்வரன் லிங்கேஸ்வரன், அக்ஷேயா தேவே குமார், அம்மார் அல் ஃபத்தாஹ் பின் ஃபைருஸ் கான், தேஜாஷ்வினி பிரபாகரன் மற்றும் ருத்ராய்ஷ் மாதவ் நந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாணவர்களின் இந்த சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இளம் தலைமுறையின் புதுமை திறனை ஊக்குவிக்கும் இந்த வெற்றி, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளுக்கான ஊக்கமாக அமையும் என நம்பப்படுகிறது.

Scroll to Top