பீஜிங், 24 மே 2026 : மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும், மலேசிய தயாரிப்புகளின் கொள்முதலை மேலும் விரிவுபடுத்தவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
சீன அதிகாரிகளும் மலேசிய பிரதிநிதிகளும் நடத்திய சந்திப்பில், இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மலேசியாவின் உணவு, வேளாண்மை மற்றும் உயர்தர தயாரிப்புகளுக்கு சீன சந்தையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சீனா குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, இருநாட்டு வர்த்தக வளர்ச்சிக்காக புதிய ஒத்துழைப்பு முயற்சிகளையும் முன்னெடுக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.
மலேசியா மற்றும் சீனா இடையிலான பொருளாதார உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இந்த நடவடிக்கை மலேசிய ஏற்றுமதி துறைக்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளில் சீனா, மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.





