என் தமிழ்

தேசிய திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் PACE திட்டம்

கோலாலம்பூர், 17 மே 2026 : மலேசியர்களின் திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால பணியாளர் உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள PACE திட்டம், நாட்டின் மனிதவள வளர்ச்சிக்கான முக்கிய தேசிய மூலோபாய முதலீடாக கருதப்படுகிறது.

RM100 மில்லியன் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், அதிக திறன்கொண்ட, போட்டித்திறன் மிக்க மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாரான மலேசியப் பணியாளர் படையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

PACE திட்டத்தின் கீழ் செயல்படும் VETRI, DAYA, ELEVATE, DIGITAL, BORNEO, NUSA மற்றும் GTB உள்ளிட்ட 10 முக்கிய மூலோபாயத் திட்டங்கள் மூலம் இளைஞர் திறன் மேம்பாடு, உயர்தர தொழில்திறன் பயிற்சி, உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துதல், பிராந்திய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழிற்புரட்சி 4.0-ஐ எதிர்கொள்ளும் பணியாளர் உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள், பகுதிநேரப் பணியாளர்கள், சிறு தொழில்முனைவோர், பிராந்திய சமூகங்கள் மற்றும் எதிர்கால பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புதிய பொருளாதார வளர்ச்சியின் வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதே மதானி அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மேலும், வேலைவாய்ப்புகளை வழங்குவதில் மட்டும் அல்லாமல், தொடர்ந்து முன்னேறுவதற்கான திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளுடன் கூடிய மலேசியர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top