01 மே 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், இளைய தமிழ்வேல் ஆதி குமணனின் நினைவு விழா 2026 மே 1ஆம் தேதி லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தாமரை குழுமத்தின் இயக்குநரும் சமூகத் தலைவருமான டத்தோ ரேனா ராமலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்வில் அவர் உரையாற்றும்போது, இளைய தமிழ்வேல் ஆதி குமணனின் பணிகளையும் தமிழ் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து, இளைய தமிழ்வேல் ஆதி குமணன் நினைவு நாள் மாநிலம் தோறும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுத் தலைவராக மு.திருநாவுக்கரசு செயல்பட்டார். வரவேற்புரையை எம்.கே.கருணாகரன் வழங்கினார். சிறப்புரையை ராகா உதயா வழங்கி, ஆதி குமணனின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் சமூகச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி நெறியாளராக பொன் கோகிலம் பணியாற்ற, இறுதியில் பாலமுருகன் சின்னதம்பி நன்றியுரை வழங்கினார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்த ஆதி குமணனின் நினைவு நாள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
நிகழ்ச்சியின் நேரலை காண:
https://youtube.com/live/RicmET7t9zs









