என் தமிழ்

திரையிசை இலக்கியப் போட்டி 2026 : பதிவுகள் தொடக்கம்

சிலாங்கூர், 02 மே 2026 : ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் மலர் ஊடகம் இணைந்து, “திரையிசை கண்ட இலக்கியம்; நயம்பட உரைப்போம் 2026” என்ற தலைப்பில் சிறப்பு போட்டியை அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் இலக்கியச் செய்யுள்களின் பயன்பாட்டை விளக்குவதையே நோக்கமாகக் கொண்ட இந்தப் போட்டி, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் பங்கேற்கலாம். 26 வயதுக்கு மேற்பட்டோர் பொதுப் பிரிவில் பங்கேற்கலாம்.

போட்டிக்கான பதிவு மே 25ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டும். அதன் பின்னர் போட்டியாளர்கள் தங்கள் காணொளிகளை அனுப்புவதற்கான அவகாசம் வழங்கப்படும். பெறப்படும் காணொளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி சிலாங்கூரில் நடைபெறும்.

பரிசு விவரங்களின் படி, இரு பிரிவுகளிலும் முதல் பரிசாக RM5,000 ரொக்கம், தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் பரிசு RM3,000, மூன்றாம் பரிசு RM1,500 வழங்கப்படும். 4ஆம் இடம் முதல் 10ஆம் இடம் வரை தலா RM500 ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இறுதிச் சுற்றில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும், திரையிசையின் தனித்துவத்தையும் இணைக்கும் இந்தப் போட்டி, இளைஞர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்கும் ஒரு மேடையாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு 0122443010 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த நிகழ்வை ஓம்ஸ் அறவாரியம் மற்றும் மலர் ஊடகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

Scroll to Top