பெஸ்தாரி ஜெயா, 02 மே 2026 : 2026 ஏப்ரல் 30ஆம் தேதி, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி மைதானத்தில் 49வது ஆண்டு பள்ளி விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இயற்கை பரம்பொருளின் அருளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ஆசிரியர் ஷர்மினி தலைமையிலான செயற்குழுவினரால் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. மழை, வெயில் பாராது திடல் ஏற்பாடுகள் முதல் போட்டி பயிற்சிகள் வரை ஆசிரியர்கள் உறுதியுடன் உழைத்தனர்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், சிறப்பு விருந்தினர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், சிற்றுண்டி பணியாளர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் பலர் ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்நிகழ்வின் வெற்றிக்காக உதவிய அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டது.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” என்ற குறளின் பொருளைப் போல, அனைவரின் பங்களிப்பும் இந்த விழாவை வெற்றிகரமாக்கியது என குறிப்பிடப்பட்டது.








