செகாமட், 30 ஏப்ரல் 2026 :செகாமட் பாராளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள SJKT லடாங் சுங்கை செனருட் பள்ளியை தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் அண்மையில் பார்வையிட்டார். அவருடன் செகாமட் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் வருகையின் முக்கிய நோக்கம், பள்ளியின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, அது எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் சிக்கல்களை நேரடியாக அறிதல் ஆகும். குறிப்பாக, பள்ளியில் உள்ள வசதிகள், கல்விப் பொருட்கள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாணவர்களுக்கு மேலும் பாதுகாப்பான மற்றும் உகந்த கற்றல் சூழலை உருவாக்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்தார். செகாமட் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சமமான கவனம் செலுத்தப்படும் என்றும், அவற்றின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் SJKT லடாங் சுங்கை செனருட் பள்ளியின் ஆசிரியர்களுக்கு அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.








