என் தமிழ்

MACC புதிய தலைமை ஆணையர் விரைவில் அறிவிப்பு: பிரதமர் அன்வார்

ஜோகூர் பாரு, 24 ஏப்ரல் 2026 : மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல், இன்று யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராகிமுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இருப்பினும், தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் குறித்த விவரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படாது, பின்னர் மட்டுமே அறிவிக்கப்படும்.

“பின்னர்… நான் அதை பின்னர் பொதுவெளியில் அறிவிப்பேன். இதுகுறித்து நான் முன்னரே மாட்சிமை பொருந்திய மன்னர் (யாங் டி-பெர்டுவான் அகோங், சுல்தான் இப்ராஹிம்) அவர்களுடன் கலந்துரையாடினேன்,” என்று அவர் கூறினார். ஜோகூர் பாருவின் பெர்மாஸ் ஜெயா சமூகத்தினருடன் கலந்துரையாடிய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பை வழிநடத்த, புதிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நேற்று யாங் டி-பெர்டுவான் அகோங், சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். பதவியில் இருக்கும் டான் ஸ்ரீ அஸாம் பாகியின் ஒப்பந்தம் மே 12 அன்று காலாவதியாகவுள்ளதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

Scroll to Top