மாஸ்கோ, 31 மார்ச் 2026 : இந்த தகவலை அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ, இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய லாவ்ரோவ், நடப்பு ஆண்டில் ரஷியாவுக்கு வர உள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகவும், பரஸ்பர நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு முன்மாதிரியாக ரஷியா–இந்தியா உறவு திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.





