என் தமிழ்

சர்வதேச மகளிர் தினம் 2026: பினாங்கில் ஜும்பா விழா

பினாங்கு : சர்வதேச மகளிர் தினம் 2026 முன்னிட்டு, மலேசியா இந்துதர்ம மாமன்றம் (பெனாங்க் கிளை) பெண்கள் பிரிவு சார்பில், PWDC ஆதரவுடன் உற்சாகமான ஜும்பா உடற்பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வயதுடைய பெண்கள் கலந்து கொண்டு, ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தும் வகையில் ஆற்றல்மிக்க பயிற்சியில் ஈடுபட்டனர். உடற்பயிற்சி, சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய இந்த நிகழ்வு, பெண்கள் ஒன்றிணையும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

பெண்களின் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பெனாங்க் பெண்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தையும் இந்த நிகழ்வு கொண்டிருந்தது. மகளிர் தினம் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிரம்பிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வின் போது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய 3 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறு தொழில் தொடங்கவும் திறன்களை மேம்படுத்தவும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசியா இந்துதர்ம மாமன்றம் (பெனாங்க் கிளை) தலைவர் திரு. தனபாலன் நந்தகுமார் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கான இத்தகைய முயற்சிகளை பாராட்டி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த அயராது முயற்சி எடுத்த பெண்கள் பிரிவு தலைவி திருமதி. தர்ம பூஷிணி எம். தமிழ்செல்வி மற்றும் குழுவினருக்கு சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Scroll to Top