என் தமிழ்

இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுத பதற்றம் அதிகரிப்பு: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

வாஷிங்டன், 20 மார்ச் 2026 : அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உளவுத்துறையின் ஆண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியா–பாகிஸ்தான் உறவு அணு மோதல் அபாயத்துடன் தொடர்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் நேரடி போருக்கு விருப்பம் காட்டாதபோதிலும், பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து பதற்றத்தை தூண்டும் சூழல் நிலவுகிறது; இதற்கு பஹல்காம் தாக்குதல் எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவை தாக்கும் சாத்தியம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சி நடைபெறுகிறது என்றும், தலீபான்கள் பாதுகாப்பை பலப்படுத்தி அதற்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

Scroll to Top