மத்திய கிழக்கு, 19 மார்ச் 2026 : ஈரானைச் சுற்றியுள்ள பதற்ற நிலையை முன்னிட்டு பல நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அஜர்பைஜான், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், லெபனான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், அனைத்து வகையான தாக்குதல்களையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை ஈரான் தாமதமின்றி அமல்படுத்தி, அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அண்டை நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது தூண்டுதல் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும், எந்த நிபந்தனையும் இன்றி உடனடி போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த நாடுகள் ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளன.




