என் தமிழ்

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் யாவை? இந்தியாவை எதிர்கொள்ளும் அணி எது?

02 மார்ச் 2026 : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. பரபரப்பாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் சுற்றுகளின் முடிவில் இந்த நான்கு அணிகள் கடைசி நான்கு இடங்களை பிடித்து கோப்பைக்கான இறுதி போராட்டத்தில் முன்னேறியுள்ளன.

முதல் அரையிறுதி போட்டி வரும் 4-ம் தேதி (புதன்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சமீப காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த போட்டி கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அரையிறுதி போட்டி 5-ம் தேதி (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிக்க உள்ளனர். அதேசமயம் இங்கிலாந்து அணியும் சமநிலை ஆட்டத்தை வெளிப்படுத்தி சவால் விடுக்கும் நிலை உள்ளது.

அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. அப்போட்டியில் வெற்றி பெறும் அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

Scroll to Top