என் தமிழ்

மதுரை வந்த பிரதமர் மோடியை வரவேற்றதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் – எல். முருகன்

மதுரை,  01 மார்ச் 2026 : தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்கும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கும் பிரதமர் மோடி இன்று மதுரை வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதுகுறித்து எல். முருகன் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தெரிவித்ததாவது:

“சங்கத் தமிழ் செழித்து வளர்ந்த மதுரை மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக மக்களின் சார்பில் தமிழ் எழுத்துகளும் திருக்குறளும் பொறிக்கப்பட்ட சால்வை அணிவித்து வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top