ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து அந்நாட்டில் சதாம் உசேன் ஆதரவு படையினரின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கியது. ஐ.எஸ். என்று அழைக்கப்பட்ட அந்த தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் கடந்த மாதம் மட்டும் 1420 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மேலும் 1370 ஈராக்கியர்கள் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் இருந்து வலுக்கட்டாயமாக 600000 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான குர்திஷ் படையினர் மற்றம் சிறுபான்மை மதத்தினரையும் அத்தீவிரவாதிகள் கொடூரமான முறையில் கொன்ற காட்சிகள் யூ டியூபில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தாக்குதலில் ஜூலை மாதம் 1737 பேரும், ஜூனில் 2400 பேரும் கொல்லப்பட்டதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. பலியானவர்கள் குறித்த எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஐ.நா, தற்போது தோராயமாக தான் தாங்கள் இறப்புகள் குறித்து கணக்கிட்டு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்று ஐ.நா. மேலும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1420 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா தகவல்
