சென்னை, 23 பிப்ரவரி 2026 : உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து வீரர் Will Jacks 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக பந்து வீசி அசத்தியார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து ஸ்பின்னராக அவர் புதிய சாதனையை படைத்தார்.
இலங்கையின் Pallekele நகரில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
பின்னர் இலக்கு நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 51 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணிக்காக வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார்.





