12 பிப்ரவரி 2026 : இலக்கவியல் அமைச்சின் கீழ், அரசு MyGOV Malaysia எனும் ஒருங்கிணைந்த அதிநவீன இணையத் தளம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. MyGOV Malaysia தளம், அரசு நிபுணர்களால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி ஆகும். இந்த முயற்சி Government Technology (GovTech) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
MyGOV என்பது ஒரே இடத்தில் பல்வேறு அரசாங்க அமைப்புகளின் தகவல்கள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமாகும். கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பம் மற்றும் போக்குவரத்து போன்ற பிரிவுகளின் கீழ் மக்கள் எளிதில் சேவைகளை அணுக முடியும்; பல்வேறு இணையதளங்களை தனித்தனியாக அணுக வேண்டிய அவசியம் இல்லை. மேலும், MyGOV தேசிய டிஜிட்டல் அடையாளமான MyDigital ID மற்றும் Single Sign-On (SSO) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் வழி பயனர்கள் ஒரே அடையாளத்தைக் கொண்டு பல சேவைகளை பாதுகாப்பாக அணுக முடியும்; இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு தனிப்பட்ட தரவு பாதுகாப்பையும் உறுதிபடுத்துகிறது.
தற்போது, MyGOV Malaysia மொத்தம் 16 அரசாங்க முகமைகளைக் கொண்ட 44 சேவைகளை வழங்குகிறது. கடந்த 11 பிப்ரவரி 2026 வரை மட்டும், MyGOV செயலியின் பதிவிறக்க எண்ணிக்கை 1,567,491 ஆக உயர்ந்துள்ளது; இது 2025 டிசம்பர் மாதத்தில் இருந்த 437,393 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 200% அதிகரிப்பைக் காட்டுகிறது. Sumbangan Tunai Rahmah (STR) நிலைச் சரிபார்ப்பு மற்றும் கோரப்படாத பணம் (Wang Tak Dituntut) சரிபார்ப்பு வசதிகள் MyGOV செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவு, மலேசிய மக்களிடையே இந்த அரசாங்கச் செயலிக்கு நல்ல வரவேற்பு இருப்பதை புலப்படுத்துகிறது.
MySejahtera, MyJPJ மற்றும் MyBorderPass போன்ற ஏற்கனவே நடப்பில் உள்ள சில அரசாங்கச் செயலிகளின் சேவைகள் நிறுத்தபட்டாது. மாறாக வழக்கிலுள்ள அரசு செயலிகள் இந்த MyGOV Malaysia செயலியோடு ஒருங்கிணைக்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் தெரிவித்தார். அதோடு இந்த ஆண்டில், 30-க்கும் மேற்பட்ட புதிய சேவைகள் MyGOV Malaysia-இல் ஒருங்கிணைக்க இலக்கவியல் அமைச்சு திட்டமிட்டுள்ளாதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். ஆக இந்த MyGOV Malaysia எனும் செயலியை மக்கள் இன்றே பதிவிறக்கம் செய்து பயனடைய கேட்டுக் கொள்ளபடுகின்றனர்.






