கும்பகோணம்{இந்தியா}, 07 ஜனவரி 2026 : அயலகத் தமிழர் விழா 2026 இல் கலந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள மலேசிய தமிழர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கும்பகோணத்தில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 07 ஜனவரி 2026 அன்று வருகை புரிந்தனர். இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் பொன் கதிரேசன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கல்லூரிக்கு வந்திருந்த மலேசிய தமிழர் சங்கக் குழுவினருக்கு திரு. பிரசாத் அவர்களின் தலைமையில் கரகாட்டம், காவடியாட்டம் மற்றும் இசை முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அன்னை கல்லுரியில் தமிழநாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் மலேசிய தமிழர் சங்க தேசிய தலைவர் திரு. பரமசிவம் மருதை அவர்கள் உரையாற்றினார். மலேசியா நாட்டில் வாழும் தமிழர்கள் வரலாற்றையும், மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியுள்ள பங்கு குறித்து தனது உரையில் அவர் குறிப்பிட்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

















