நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜெராம் பாடாங் மற்றும் போர்ட்டிக்சன் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ம.இ.கா ராசா தொகுதியின் காங்கிரஸ் தலைவரும், ம.இ.கா நெகிரி மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் ம.இ.கா தேசிய தலைமைச் செயலாளரும் ‘நாம்’ இயக்கத்தின் நெகிரி மாநில தலைவரும் மற்றும் பல்வேறு சமுக அமைப்புகளின் காப்பளரும் ஆலோசகருமான வழக்கறிஞர் மதிப்புமிகு டத்தோ டி.ராஜகோபாலு (வயது 63) நேற்று 25/08/2014 அன்று அதிகாலை 3.20 மணியளவில் இறைவனடி எய்தினார். 25/08/2014 மாலை நடைபெற்ற அன்னாரின் இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.