இஸ்ரேல் குண்டு வீச்சில் பாலஸ்தீனத்தில் 496 குழந்தைகள் பலி

இஸ்ரேல் குண்டு வீச்சில் பாலஸ்தீனத்தில் 496 குழந்தைகள் பலி

thegioi-Israel-8

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் கடந்த மாதம் (ஜூலை) 8–ந்தேதி முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் காஸாவில் வாழும் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர். அவர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின்றன.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் குழந்தைகள் மட்டும் 496 பேர் ஆவர். இவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள். யுனிசெப் நிறுவனத்தின் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி தலைவர் பெர்னில் அயர்ன்சைடு இதனை தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் முறிவு ஏற்பட்டவுடன் காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்கு தலை தொடங்கிவிட்டது. கடந்த 48 மணி நேரத்தில் 25–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9–க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.