கோலாலம்பூர், 07 அக்டோபர் 2025 :. தமிழ் அறவாரியம் 14-ஆம் நாள் பிப்ரவரி 2003 நிறுவப்பட்டதிலிருந்து, நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எங்களின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் திட்டங்களின் வழி பலனடைந்துள்ளனர். எங்களின் செயல்திட்டங்களான இம்பாக், பள்ளி மேலாளர் வாரியம், மாணவர் தன்னாளுமை முகாம், தமிழ்க்கல்வி ஆய்விதழ், பள்ளி சார்ந்த நிர்வாகப் பயிற்சி ஆகியவற்றை எண்ணற்ற தமிழ்க் கல்விப் பங்குதாரர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
நிதி திரட்டும் நிகழ்ச்சி விவரங்கள்
நாள் : 11 அக்டோபர் 2025 (சனி)
நேரம் : இரவு 7 மணி
இடம் : சுங்கை ரெங்காம் மாநாட்டு மையம், ஷா அலாம்
பங்கேற்பாளர்கள் : 500 பேர்
நுழைவு சீட்டு : ரி.ம 250
சிறப்பு பிரமுகர்
கல்வி அமைச்சின் துணை அமைச்சர் மாண்புமிகு வோங் கா வோ
நோக்கம்
தமிழ் அறவாரிய முதன்மை கல்விச் செயல்த்திட்டங்களுக்கு ஆதரவளிக்க:
- பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி
- பள்ளி தலைமைத்துவம் & நிர்வாகப் பயிற்சி
- மாணவர்களின் திறன் & பண்பாட்டு மேம்பாடு
- கல்விக் கொள்கை ஆய்வு
- தாய்மொழி கல்வி வழி சிறந்த தலைமுறையை உருவாக்குதல்
- செயலகச் செலவுகள்
பொதுமக்கள் இந்நிதி திரட்டும் விருந்தில் கலந்து ஆதரவளிப்பீர்கள் எனப் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம். மேலதிகத் தகவல்களுக்குப் பொறிஞர் க. மதன் ராஜ் அவர்களை 016 463 5423 என்ற எண்ணிலும் mathanraj.tamilfoundation@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது தமிழ் அறவாரியத் திட்ட அதிகாரி குமாரி ரினிஷா அவர்களை 016 4180165 என்ற எண்ணிலும் info@tamilfoundation.org என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.





