நாளை வெள்ளிக்கிழமையன்று நெதர்லாந்திலிருந்து MH17 விமானப் பேரிடரில் பலியானவர்களின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் போது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும். இந்த ஒரு நிமிட மெளன அஞ்சலி காலை 10.45 மணியிலிருந்து 11.30 மணி வரைக்குமான இடைபட்ட நேரத்தில் மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஷபரி சீக் தெரிவித்தார்.