என் தமிழ்

இளம் கவிஞர்களின் நூல்கள் வெளியீடு கண்டன

பெட்டலிங் ஜெயா, 05 அக்டோபர் 2025 : எழுத்தாளர் பொன் கோகிலம் அவர்களின் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கவிஞர்களின் தனி தனி கவிதை நூல்கள் வெளியீட்டு விழா கவிமுன்றில் 04 அக்டோபர் 2025 அன்று தோட்ட மாளிகை, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேசிய ஒருமைபாட்டுத் துணையமைச்சர் மாண்புமிகு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு. சித்துராஜ் பொன்ராஜ், சிங்கப்பூர் சிறப்புரையாற்றினார்.

அன்பரசு கிருஷ்ணன், திவ்வியா.ப.தீ, பிரியதர்ஷினி லோகநாதன், விக்னேஸ்வரி மணியம், தாமரை முனுசாமி, அர்விந்தன் நல்ல சுகம், இலட்சுமி ஐயாக்கண்ணு, ஜமுனாஸ்ரீ பொன்னுசாமி ஆகிய இளம் கவிஞர்கள் எழுதிய கவிதை நூல்கள் இந்த நிகழ்வில் வெளியீடு கண்டன.

Scroll to Top