கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமான விபத்தில் பயணித்த 4 மலேசிய பயணிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 110,643 ரிங்கிட் களவாடிய குற்றத்திற்காக ஒரு வங்கி அதிகாரியும் அவரது கணவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இவ்விருவரும் பணத்தைக் களவாடியது, வேறு கணக்கிற்கு மாற்றியது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது, மற்றும் சம்பந்தப்பட்ட அந்த நான்கு பயணிகளின் வங்கி அட்டையைப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நுர்ஷிலா மற்றும் அவரது கணவர் பஷீர் அஹ்மாட் மெளலா ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றஞ்சாட்டுகளை எதிர்த்து மேல்விசாரணை கோரியுள்ளனர்.
நுர் ஷிலா மீது 12 குற்றஞ்சாட்டுகளும், பஷீர் மீது 3 குற்றஞ்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்விருவரும் தற்போது முறையே 12,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.