என் தமிழ்

பிரபல கோலிவுட் காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

சென்னை, 18 செப்டம்பர் 2025 : கோலிவுட்டின் பிரபல குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான திரு. ரோபோ சங்கர் தனது 46 வது வயதில் இன்று 18/09/2025 சென்னையில் காலமானார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததால சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை 08.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் காலமானார். விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின்னர் பல திரைப்படங்களில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

#RoboShankar
#Kollywood
#RoboShankarDeath

Scroll to Top