இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடத்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து ஐ.நா. சபையில் அமெரிக்கா கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து விசாரிக்க குழுவை ஐ.நா. நியமித்தது. அக்குழு விரைவில் இலங்கை சென்று விசாரணை நடத்த உள்ளது.
இந்த நிலையில், ‘ஐ.நா. விசாரணை குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும், அக்குழுவினர் இலங்கைக்கு வர விசா வழங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ஐ.நா. குழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி இலங்கையை சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.