பாய்பிரெண்டுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்த திரிஷா

பாய்பிரெண்டுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்த திரிஷா

081456912

சென்னை: திரிஷா தனது பாய் பிரெண்ட் ராணாவுடன் ஜோடியாக திருமண விழாவுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.நடிகை திரிஷாவும் தமிழில் ‘ஆரம்பம் படத்திலும் மற்றும் ஏராளமான தெலுங்கு படத்திலும் நடித்த ராணாவும் காதலிப்பதாக வதந்தி வந்த வண்ணம் இருந்தது. திரிஷாவின் தந்தை இறந்தபோதுகூட அவரது வீட்டுக்கு வந்த ராணா உடனிருந்து எல்லா காரியங்களையும் செய்து கொடுத்தார். ‘நீங்களும் திரிஷாவும் காதலிக்கிறீர்களா? என்பதற்கு இதுவரை நேரடியாக பதில் சொல்லாமல், ‘இருவரும் நண்பர்களாக பழகுகிறோம் என்று மழுப்பலாக பதில் அளித்து வந்தனர். 

இப்போது குட்டு அம்பலமாகி விட்டது. நேற்று ஐதராபாத்தில் நடந்த சம்பவம் இவர்களின் காதல் ரகசியத்தை போட்டு உடைத்துவிட்டது. பிரபல டோலிவுட் இயக்குனர் ராகவேந்திர ராவ் மகன் பிரகாஷ் மற்றும் கனிகா தில்லான் திருமண வரவேற்பு நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ராணாவும், திரிஷாவும் ஒரே காரில் காதல் பறவைகள் போல் ஜோடியாக வந்து இறங்கினர். இதைப்பார்த்ததும் அங்கிருந்த புகைப்பட, வீடியோகிராபர்கள் காதல் ஜோடியின் ரம்யமான காட்சிகளை பரபரப்பாக படமாக்கினார்கள். கோட்டு சூட்டுடன் ராணா வர அவர் அருகில் சேலை கட்டிக்கொண்டு தமிழ்பெண்ணாக ஒய்யாரமாக நடந்து வந்தார் திரிஷா.