கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் 2025 : சிலாங்கூர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) மகளிர் பிரிவின் 39ஆம் ஆண்டு பேராளர் மாநாடு இன்று மாலை 6.00 மணிக்கு, ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில், ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாநில ம.இ.கா தலைவர் திரு சங்கர் ராஜ் அவர்கள் தலைமையேற்றார். மாநில மகளிர் பிரிவு தலைவி திருமதி மகேஸ்வரி, துணைத் தலைவி திருமதி புவனேஸ்வரி மற்றும் அவர்களது குழுவினரும் இம்மாநாட்டை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில், ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி YB சரஸ்வதி நல்லத்தம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் பிரிவின் பங்களிப்பு, தலைமைத்திறன் மற்றும் எதிர்கால நோக்கங்களை வலியுறுத்தும் உரையினை வழங்கினார்.
மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து வந்த பிரதிநிதிகள், மகளிர் முன்னேற்றம், சமூக நலத் திட்டங்கள் மற்றும் அரசியல் செயல்பாடுகளில் மகளிரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாநாடு, ம.இ.கா மகளிர் பிரிவின் மாநில மற்றும் தேசிய அளவிலான பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான புதிய உறுதியையும், சிலாங்கூர் மாநிலத்தில் கட்சியின் நிலையை மேலும் வலுவாக்கும் முனைப்பையும் வெளிப்படுத்தியது.








