என் தமிழ்

2025ம் ஆண்டு சிலாங்கூர் மாநில PPP மாநாடு — ஒற்றுமையும் ஆதரவும் வலுவானது

ஷா ஆலம், 10 ஆகஸ்ட் 2025 : சிலாங்கூர் மாநில மக்கள் முற்போக்கு கட்சியின் (PPP) மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாடு, பரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் முக்கியக் கட்சியாக PPP-யின் நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது.

மாநாட்டை சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி தலைவர், டத்தோ வீரா மேகத் துவங்கி வைத்தார். தனது உரையில், கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையைப் பேணிக் கொண்டு, தேசிய முன்னணி மக்களின் முதன்மைத் தேர்வாக நிலைத்திருக்க பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், PPP தலைவர், டத்தோ டாக்டர் லோக பாலா மோகன், துணைத் தலைவர்,டத்தோ மோகன் கந்தசாமி, பொதுச் செயலாளர் டத்தோ இந்தர் சிங் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

இந்த ஆண்டு மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள 22 பிரிவுகளில் இருந்து 737 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அம்னோ பிரிவு தலைவர்கள் மற்றும் பரிசான் நேஷனல் தலைவர்கள் ஆகியோரின் பங்கேற்பு, PPP-க்கு வழங்கப்படும் வலுவான ஆதரவையும், BN கூட்டணியின் கட்சிகள் இடையேயான மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதாகும்.

இந்த ஒற்றுமை உணர்வுடன், சிலாங்கூர் மாநில PPP, எதிர்காலத்தில் BN வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Scroll to Top