என் தமிழ்

மாணவர் உதவி நிதியம் நடத்தும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டுரைப் போட்டியின் வட மண்டல நேரடிப் போட்டிக்கு 23 மாணவர்கள் தேர்வு

கோலாலம்பூர், 24 ஜுலை 2025 : தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்திய தமிழ்ப்பள்ளி கட்டுரைப் போட்டியில் வட மண்டலத்திற்கு 23 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3இல் சுங்கை சிப்புட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும். காலை 9.30க்கு பதிவும் சிற்றுண்டியும் வழங்கப்படும். அதன்பிறகு விளக்கமும் போட்டியும் தொடங்கும்.
வட மண்டலத்தில் சிறந்த கட்டுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 23 மாணவர்களும் அவர்களின் பள்ளிகளும் வருமாறு:

  1. அஞ்ஜனா தீபன்ராஜ் பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  2. ஷைந்திவி கோவலன் ஈப்போ புனித பிலோமீனா
  3. இரா. பைரல் ஈப்போ கான் வெண்ட்
  4. பிரேமித்தா புருஷோதமன் ஈப்போ புனித பிலோமீனா
  5. நித்திஷ் பாஸ்கரன் பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  6. ஷர்விநாயகி வினாயகசேகரன் ஈப்போ புனித பிலோமீனா
  7. க. மனிஷ்ஷா பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  8. நவியா தர்மேந்திர பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  9. ந. ஐஸ்வர்யா பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  10. சர்வினி பரமேஸ்வரன் பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  11. வேதாஷினி இராதகிருஷ்ணன் ஈப்போ புனித பிலோமீனா
  12. தீபிகாசாய் சங்கர் ஈப்போ புனித பிலோமீனா
  13. அ. துர்காஷினி தஞ்சோங் ரம்புத்தான்
  14. லாவண்யா விஜயன் பிடோர் பள்ளி
  15. அஸ்மித்த பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  16. கி. கெமெலியா என் ஈப்போ புனித பிலோமீனா
  17. இரகஷனராஜ பினாங்கு இராமகிருஷ்ண பள்ளி
  18. சாதனா லோகநாதன் ஈப்போ கம்போங் சிமி
  19. சுந்தரவேல் கணேசன் புண்டுட் மஞ்சோங்
  20. ஷமிதா சாமுவேல் ஈப்போ புனித பிலோமீனா
  21. பைரவி இராமசந்திரன் குவாலாதெர்லா பள்ளி,கேமரன் மலை
  22. தமிஷ் இராமசந்திரன் குவாலாதெர்லா பள்ளி,கேமரன் மலை
  23. ஜனுஷா தனகுமாரா குவாலாதெர்லா பள்ளி,கேமரன் மலை

இப்போட்டியின் இறுதிச் சுற்றில் நேரடியாக வந்து கலந்துக்கொள்ளும் மாணவர்கள் அங்கு கொடுக்கப்படும் தலைப்புகளில் கட்டுரை எழுத வேண்டும்.

வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரி. ம. 1,000.00, இரண்டாம் பரிசு ரி. ம. 700.00, மூன்றாம் பரிசு ரி. ம. 500.00. அதோடு, 5 ஆறுதல் பரிசாக ரி. ம. 100.00 வீதம் வழங்கப்படும். முதல் பரிசுகளைப் பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகள், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும். நேரடியாக போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு டீ- சட்டைகளும் சான்றிதழும் வழங்கப்படும். அதோடு நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்து செலவுத் தொகை, உணவு ஆகியவையும் கொடுக்கப்படும்.

முதல் கட்டமாக மத்திய மண்டலத்திற்கான போட்டி கோலாலம்பூர் பிரிக்பிள்ஸ் விவேகானந்த தமிழ்ப்பள்ளியில் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00க்கு நடைபெற்றது. மேல் விபரம் பெற வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் (012-6589252) அல்லது அறங்காவலர் திரு. பரமசிவம் (011-35231429) ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம் என்று தமது பத்திரிகைச் செய்தியில் வாரியத்தின் செயலாளர் திரு. பத்மநாபன் குறிப்பிட்டார். மின்னஞ்சல் முகவரி: tamilschoolCAF@gmail.com.

Scroll to Top