என் தமிழ்

ஊழலைத் தடுக்கும் முயற்சியில் முன்னேறிய FINAS – ISO 37001:2016 சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

கோலாலம்பூர், 02 ஜூலை 2025 : மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் (FINAS) கடந்த ஏப்ரல் 21, 2025 முதல் ஏப்ரல் 20, 2028 வரை அமலுக்கு வரும் MS ISO 37001:2016 ஊழல் தடுப்பு மேலாண்மை முறையின் (Anti-Bribery Management System – ABMS) மூவருடச் சான்றிதழைப் பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

இந்த சான்றிதழ், FINAS நிறுவனத்தின் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்முயற்சியின் ஒளிகாட்டியாக விளங்குகின்றது. இதன் மூலம் நிறுவனத்தின் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த ஒழுங்கு நிலைமை மேலும் வலுப்பெறும்.

என் தமிழ் இணையதள ஊடகத்தின் சார்பில், FINAS நிறுவனத்தினருக்கு இதன் பெறுபேற்றுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

FINAS குழுவினர் எதிர்காலத்திலும் ஊழல் பழக்கங்களை முற்றிலும் ஒழிக்கின்ற முனைப்புடன் செயல்பட்டு, நிறுவனத்தின் நேர்மை மற்றும் நம்பிக்கையை நிலைநாட்ட உழைக்க வாழ்த்துகிறோம்.

Scroll to Top