கோலாலம்பூர் | 17/06/2025 : தெற்காசிய நூலகர்களின் 19-வது மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தின் (19th Congress of Southeast Asian Librarians – CONSAL XIX) துவக்கவிழா, மலேசிய தேசிய நூலகம் மற்றும் மலேசிய நூலகர் சங்கம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இன்று கோலாலம்பூரில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவினை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்தார். அவரது உரையில், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும் நூலகங்களின் முக்கிய பங்கு குறித்து உரையாற்றினார்.
தேசிய ஒருமைப்பாடு அமைச்சரான டத்தோ ஆரொன் ஆகோ தாகாங் மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த மாநாடு, நூலகத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், உலகளாவிய அளவில் நூலகர்களின் பங்கினை மேம்படுத்துவதிலும் மிக முக்கியமான அடியெடுத்து வைக்கும் நிகழ்வாகும்.





