ஆகஸ்டு 22-ஆம் தேதி ஏறக்குறைய 22 MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்கள் தாயகத்திற்குக் கொண்டு வரப்படும்.
இதற்கு முன்னர் 16 பேரின் சடலங்கள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் சில மலேசியப் பயணிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் 18 சவப்பெட்டிகளும், மேலும் மூன்றுப் பயணிகளின் அஸ்தி பாத்திரம் கொண்டுவரப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் வீ கா சியோங் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
‘இன்று மேலும் இரண்டு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் கண்டுள்ளன. இன்னும் அதிகமான மலேசியர்களின் சடலங்களை தாயகம் அனுப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாரம் வியாழக்கிழமை முதல் பயணத்தில் மேலும் ஒரு சடலத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
‘நெதர்லாந்தின் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கிறது. அவர்களின் விதிமுறைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.