நாடு 57வது சுகந்திர தினத்தை கொண்டாட இன்னும் சில தினங்களே இருக்கும் இவ்வேளையிலும் இன்னும் சிகப்பு நிற அடையாள அட்டையுடன் தாம் யார் என்ற அடையாளங்கள் இழந்து நம்மிடையே வாழ்வோரின் எண்ணிக்கை ஏராளம். இப்பிரச்சனையால் நாட்டில் பல வாய்ப்பு வசதிகள் இருந்தும் பெறமுடியாமல் தவிப்போருக்கு தீர்வு காணும் வகையில் சமூக வியூக அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசிய குடிநுழைவு துறை தேசிய பதிவு இலாக்கவுடன் இணைந்து சிகப்பு நிற அடையாள அட்டை பதிவு நிகழ்வு 14 ஆகஸ்டு 2014 மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடந்தேறியது.
இதில் மை டப்தார் அமைச்சரவையில் ஒருங்கிணைப்பாளரான டத்தோ சிவசுப்ரமணியம் கலந்து கொண்டு பெரும்பாலோரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை முறையாக விளக்கினார்.
சுமார் 180 பேர்கள் இதில் இன்று பதிந்துள்ளனர். இந்த நடவடிக்கை ஒரு தொடர் நடவடிக்கையாக நிகழுமென்றும் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பிறமாநிலங்களில் நடத்தபடுமென்றும் மஇகாவின் செக்ரடரி ஜெனரல் திரு அ.பிரகாஸ்ராவ் அவர்கள் தெரிவித்தார்.
[vsw id=”HY_qBuGt8Xk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]